பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி நடந்த அத்துமீறல் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சபைக்கு வந்து விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால், இரு சபைகளுமே அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.
அமளியில் ஈடுபட்டதாக, லோக்சபாவில் 33 எதிர்க்கட்சி எம்.பிக்களும், ராஜ்யசபாவில் 45 எதிர்க்கட்சி எம்.பி.,க்களும், நடப்பு கூட்டத் தொடரின் மீதமுள்ள நாட்கள் முழுவதற்கும் நேற்று அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று(டிச.,19) லோக்சபா கூடியதும் இன்று(டிச.,19) எதிர்க்கட்சி எம்,பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பலமுறை எச்சரித்தும் கேளாததால் கார்த்தி சிதம்பரம், திருமாவளவன், பரூக் அப்துல்லா, ஜெகத்ரட்சன், தனுஷ் குமார், சுப்ரியா சுலே, மணீஷ் திவாரி, சசி தரூர் உள்ளிட்ட 49 எம்.பி.,க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். லோக்சபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் குறித்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். கூச்சல், குழப்பம் நிலவியதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே, லோக்சபாவில் 46 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில் 46 எம்.பி.,க்களும் என மொத்தம் 92 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது இன்று(டிச.,19) 49 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 141 ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் நகரப் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரம் மாவட்ட செயலாளர் ர.பெரியார் அவர்களின் தலைமையில் தொல். திருமாவளவன் எம்.பி., அவர்கள் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடன் நகரச் செயலாளர் கோ.சா.சரவணன், ர.சி.இரணியன், மற்றும் நிர்வாகிகள் அ.கோ. ராசபாரதி, குகன்.சுந்தர். தயாளன் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களை காவல் துறையினர் கைது செய்து விழுப்புரம் சோலை மஹாலில் தங்க வைத்து வழக்கு பதிவு செய்து மாலை விடுவித்தனர்.
No comments:
Post a Comment