திண்டிவனத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ திந்திரிணீஸ்வரர், ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி மாசி மக தீர்த்தவாரி உற்சவம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 26 February 2024

திண்டிவனத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ திந்திரிணீஸ்வரர், ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி மாசி மக தீர்த்தவாரி உற்சவம்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ திந்திரிணீஸ்வரர், ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி மாசி மக தீர்த்தவாரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் அய்யன் தோப்பு குளக்கரையில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு இன்று   அருள்மிகு மரகதாம்பிகை உடனமர் ஸ்ரீ திந்திரிணீஸ்வர சுவாமியும் ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியும் குளக்கரையில் எழுந்தருளி அருள் பாலித்தனர். பகல் ஒரு மணிக்கு திருமஞ்சனமும் அதனைத் தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அய்யன் தோப்பில் இருந்து சுவாமிகள் திண்டிவனம் நகரம் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad