வீரபாண்டி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 April 2024

வீரபாண்டி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் 7 டன் எடை கொண்ட தேரை தோளிலே சுமந்து செல்லும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரௌபதி அம்மன் சித்திரை திருவிழாவானது கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது.


இந்த தேரினை 400 கும் மேற்பட்ட நபர்கள் தங்களது தோளில் சுமந்து கொண்டு கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக மூன்று முறை சுற்றி வந்து மீண்டும் ஆலயத்திற்கு முன்பு நிறுத்தினர். இத்திருவிழாவில் இந்த கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் திரளாக கலந்து கொண்டு சூடம் ஏற்றி வேண்டுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad