போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 28 July 2024

போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி.


போலீஸ் பணியில் 36 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்த போலீசார் 4 -வது ஒன்று கூடல் நிகழ்ச்சி திண்டிவனத்தில் நடந்தது. பரங்கிமலை காவலர் பயிற்சி பள்ளியில் 1988 பயிற்சி பெற்ற போலீசார், கடலுார், விழுப்புரம் மற்றும், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சப் இன்ஸ்பெக் டர்கள் முதல் டி.எஸ்.பி.,க்கள் வரையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து அவ்வப்போது சந்தித்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட போலீசார் நண்பர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இவர்கள் அடிக்கடி சந்தித்து நிகழ்ச்சி நடந்தி வருகின்றனர். அந்த வகையில், 4 -வது ஒன்றுகூடல் நிகழ்ச்சி 28.7.2024 தேதி திண்டிவனம் ஹேட்டல் ஆரியாஸ்லில் நடந்தது. டி.எஸ்.பிக்கள்  அருள்மணி, திருவேங்கடம் ஆகியோர் தலைமை தாங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக இவர்களுக்கு பயிற்சி அளித்த  ஆசான்கள்  ராஜசேகர், ரவி ஆகியோர் பேசினர்.


பயிற்சி மற்றும் பணிக் காலங்களில் நடந்த சம்பவங்களை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் அப்பண்டைராஜ் லோகநாதன், கோவிந்தசாமி, இராமதாஸ் எஸ்.ஐ.,க்கள் இராதாகிருஷ்ணன், சீத்தாபதி, செல்வம், நடராஜன்,  வெங்கடேசன், சத்யா,  சுந்ரேசன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad