விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்ததை தட்டிக் கேட்டவர்களுக்கு அடி உதை இரண்டு தரப்பினர் மோதல். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 2 September 2024

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்ததை தட்டிக் கேட்டவர்களுக்கு அடி உதை இரண்டு தரப்பினர் மோதல்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் நவீன் வயது 20 இவர் பெங்களூரில்  பணிபுரிந்து வருகிறார். அந்த கிராமத்தில் தெருவில் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றதாக கூறப்படுகிறது.


இதை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தட்டி கேட்டு உள்ளனர். இதற்கு  நவீன் மற்றும் அங்கிருந்த இளைஞர்களுக்கும் வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை விலக்கிவிட்டு அனுப்பி வைத்தனர். மீண்டும் நவீன் மற்றும் அவரது 12 ஆம் வகுப்பு படிக்கும் தம்பி போஸ் ஆகிய இருவரும் மீண்டும் இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளனர்.


மீண்டும் அதே  இளைஞர்கள் வேகமாக செல்ல வேண்டாம் மெதுவாக செல்ல கூறி உள்ளனர். மீண்டும் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு நவீன் மற்றும் அவரது உறவினர்கள் வேகமாகச் சென்று தட்டிக்கேட்ட அதே  கிராமத்தை சேர்ந்த இளைஞர்களை தாக்க முற்பட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது அவர்கள் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக் மோதிக்கொண்டனர். மோதிக் கொள்ளும் வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.


இதுகுறித்து தகவல் அறிந்த ரோசனை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமை காவலர் வீரராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினையும் அங்கிருந்து விரட்டி விட்டனர். இந்த சம்பவத்தில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். மீண்டும் அங்கு வந்து இரு தரப்பினரும் நவீன் தரப்பினர் மற்றும் எதிர்தரப்பு இளைஞர்கள் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது தொடர்ந்து உடனடியாக  போலீசார் அங்கிருந்துவர்கள போலீசார்  அனுப்பி வைத்தனர்.


இதில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் நவீன் அவரது  தம்பி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போஸ், எதிர் தரப்பை சேர்ந்த குணா, ராகுல் மற்றும் சில  இளைஞர்களுக்கு காயமே ஏற்பட்டது.மீண்டும் அங்கு பிரச்சனை நிகழாமல் இருப்பதற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

No comments:

Post a Comment

Post Top Ad