விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி பாராட்டு. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 2 September 2024

விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி பாராட்டு.


திண்டிவனம் வால்டர் ஸ்கடர் பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி பாராட்டு.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வால்டர் ஸ்கடர் பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் சந்திரன் ஏற்பாட்டில் மாநில அளவிலான கால்பந்து போட்டியை அமைச்சர் செஞ்சி. மஸ்தான் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.கடந்த இரண்டு தினங்களாக நடந்த போட்டியில் தமிழக முழுவதும் 39 அணிகள் கலந்து கொண்டனர்.


இதில் இறுதியாக திண்டிவனத்தை சேர்ந்த அணியும் சென்னையை ராயபுரம் பகுதியை சேர்ந்த அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி  பெற்றது.இன்று இரு அணிகளும் மோதிய நிலையில் திண்டிவனத்தை சேர்ந்த K.C பிரதர்ஸ் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் செஞ்சி  மஸ்தான் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.இரண்டாம் பரிசை ராயபுரம் அணியும் மூன்றாம் பரிசை புதுவை மாநில சேர்ந்த அணியும் நான்காம் பரிசை பல்லாவரம் பகுதியை சேர்ந்த அணியும் தட்டிச் சென்றன அனைத்து அணிகளுக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாராட்டி பரிசு மற்றும் பணப்பையை வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad