திண்டிவனத்தில் வழி பிரச்சனையில் திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் தாக்கியதில் ஒருவர் படும் காயங்களுடன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதி; பெண் கவுன்சிலரின் மகன் மற்றும் எதிர் தரப்பினர் ஒருவர் கைது. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 22 September 2024

திண்டிவனத்தில் வழி பிரச்சனையில் திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் தாக்கியதில் ஒருவர் படும் காயங்களுடன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதி; பெண் கவுன்சிலரின் மகன் மற்றும் எதிர் தரப்பினர் ஒருவர் கைது.

திண்டிவனம் முருகங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராணி  வயது 50, இவர் அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் வீடு கட்டுவதற்கான கட்டுமான பொருட்களை அவரது வீட்டிற்கு வெளியே ஓரமாக அடுக்கி வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் ரேனுகா மற்றும் அவரது மகன் ரகு என்கின்ற ரகுபதி மற்றும் அவர்களின் நண்பர்கள் கட்டுமான பொருட்களை இங்கு வைக்க கூடாது என திட்டி ஆபாசமாக தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இது குறித்து இரண்டு தரப்பினரும் ரோஷனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை ராணியின் மகன் ராஜேஷ் (எ) கேசவன் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது கவுன்சிலர் ரேனுகா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் இவர்களை பார்த்து அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது ஏன் மீண்டும் எங்களை அசிங்கமாக பேசி சண்டை செய்கிறீர்கள் என  ராணி தரப்பினர் கேட்டுள்ளனர். 


இதற்கு ஆத்திரம் அடைந்த கவுன்சிலரின் மகன் ரகுபதி, அவரது உறவினர் சஞ்சய் மற்றும் கவுன்சிலர் ரேனுகா மற்றும் சிலர் சேர்ந்து ராணியை கீழே தள்ளிவிட்டு அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ராணியின் மகன் கேசவனுக்கும் கவுன்சிலரின் மகன் ரகுபதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது இதில் கவுன்சிலர் அவரது மகன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ராணியின் குடும்பத்தினரை பலமாக தாக்கியுள்ளனர்.


மேலும் அங்கிருந்த கேசவனின் இருசக்கர வாகனத்தையும் அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் இரும்பு கம்பியில் கேசவனை பலமாக தாக்கியுள்ளனர். இதில்  கேசவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இது குறித்து இரண்டு தரப்பினரும் ரோஷனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 


புகாரி பெயரில் பெண் கவுன்சிலரின் மகன் ரகு என்கின்ற ரகுபதி மற்றும் ராணியின் இளைய மகன் மணிகண்டன் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  

No comments:

Post a Comment

Post Top Ad