விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எறையானூரில் விழுப்புரம் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 10 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி தமிழ்நாடு ரோலர் ஸ்கெட்டிங் அசோசியேஷன் இணை செயலாளர் தினேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திண்டிவனம் ரோலர் ஸ்கெட்டிங் அசோசியேஷன் செயலாளர் மன்னன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட பொருளாளர் ரமணன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கத்தை வழங்கினார்.
இதில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 5 வயது முதல் 17 வயது மேற்பட்டோர் வரையிலான 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment