கல்லூரியின் முதல்வரின் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற மாணவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உதைத்தனர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 3 September 2024

கல்லூரியின் முதல்வரின் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற மாணவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உதைத்தனர்.


திண்டிவனம் அரசு கல்லூரி முதல்வரை கண்டித்தும் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்  கோரியும் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.



விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி பொறுப்பு முதல்வர் பொறுப்பில்லாத செயல்களாலும் நடவடிக்கையாலும்
மாணவர்களின் எதிர்காலமும் கல்லூரியின் நிர்வாகமும் கேள்விக்குறியாகவும் உள்ள நிலையை சரி செய்ய கோரிகல்லூரியின் முன்பாக அமர்ந்து கௌரவ விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது கல்லூரி முதல்வரிடம் கல்லூரி மாணவர்கள் ஷிப்ட் முறை கொண்டு வர வேண்டும் குடிநீர் கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளே செல்ல முற்பட்டனர் அப்பொழுது கல்லூரி முதல்வரை பார்க்க அனுமதிக்காத நிலையில் கதவை, உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கல்லூரி முதல்வர் அறையில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்தனர்.


தகவல் அறிந்த ரோசனை போலீசார் அங்கிருந்து மாணவர்களை வெளியேற்றினார்.மாணவர்கள் கூறுகையில் மீண்டும் பழைய சிஃப்ட் முறையை அனுமதிக்க வேண்டும் தற்போது கல்லூரி முழுநேரம் நடைபெறுவதால் போது இடவசதி இல்லை கழிவறையில் சரி இல்லை குடிநீர் வசதி சரியாக இல்லை போன்ற வசதிகள் இல்லாத பட்சத்தில் ஷிப்ட் முறை கல்லூரி நடைபெறுவதால் எங்களால் சரியான முறையில் கல்லூரிக்கு வர முடியவில்லை மேலும் பொறுப்பு முதல்வர் தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் மாதம் பணம் வாங்கிக் கொண்டு  கல்லூரியை ஒரே ஷிப்டாக நடத்துகிறார்.


உடனடியாக பழைய முறையான இரண்டு ஷிப்ட் முறைகளை கொண்டு வர வேண்டும் என கல்லூரி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர். மேலும் கௌரவ விரிவுரையாளர்கள் காலை, மாலை என இரு சுழற்சி முறையில் நடைபெற்ற கல்லூரியில் தற்போது பொறுப்பு முதல்வர் முழு நேர கல்லூரி ஆக மாற்றியதால் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 


மாணவர்களிடம் பொறுப்பு முதல்வர் கல்லூரிக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என தெரிவித்ததாகவும் வருகை பதிவை கேட்க மாட்டீர்களா என கேட்டதற்கு மாணவர்களிடம் உங்கள் அனைவரையும் தேர்வு எழுத வைக்க வேண்டியது எனது பொறுப்பு என தெரிவித்ததாகவும் அதனால் மாணவர்கள் வகுப்பு நடக்கும் போது உள்ளே நுழைவதும் எழுந்து செல்வதும் வாடிக்கையாகி விட்டது இது குறித்து மாணவர்களிடம் கேட்டால் முதல்வரே வருகை பதிவு தேவையில்லை என தெரிவித்துவிட்டார். என பேராசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டால் நான் அப்படி தெரிவிக்கவில்லை என கூறுகிறார். 


இதனால் கல்லூரியில் அசாதாரனமான சூழ்நிலை  நிலவுகிறது. கல்லூரியில் படிக்கும் நான்காயிரம் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்தனர். மேலும் கெளரவ விரிவுரையாளர்களை சந்திக்க பொறுப்பு முதல்வர் மறுக்கிறார் எனவே இதை கண்டித்து தான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


இதனால் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அசம்பாவிகள் நிகழாமல் இருப்பதற்கு ரோஷனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad